மேலும் செய்திகள்
தடுப்பணையில் சடலம் போலீசார் விசாரணை
27-Feb-2025
கிண்டி,:கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45. கால்டாக்சி ஓட்டுனர். திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன.கடந்த மாதம், இவரது மனைவி, காரைக்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 1ம் தேதி, மனைவியுடன் மொபைல் போனில் பேசியுள்ளார். அதன்பின், தொடர்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. பக்கத்து வீட்டை சேர்ந்தோர், மனைவி மற்றும் கிண்டி போலீசில் தகவல் தெரிவித்தனர்.போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, சரவணன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் அறிக்கை வெளிவந்த பின், மரணத்திற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.
27-Feb-2025