உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ௶இன்பினிட் சேவா அமைப்பால் புத்துயிர் பெற்ற கோவில்கள்

௶இன்பினிட் சேவா அமைப்பால் புத்துயிர் பெற்ற கோவில்கள்

சென்னை, 'இன்பினிட் சேவா' அமைப்பின் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, மகாலிங்கபுரத்தில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு, முன்னாள் டி.ஜி.பி., கோபாலகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி நரவரானந்தா, மேலாளர் ரகுநாயக்கானந்தா, 'கலைமகள்' ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், சிறப்பு விருந்தினர் 'லைப் லைன்' மருத்துவமனைகளின் தலைவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜ்குமார் பேசுகையில், ''இன்பினிட் சேவா தொண்டு நிறுவனங்கள், பழமையான கோவில்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து, தமிழகத்தின் வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், திருவள்ளூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் பெரம்பலுார் பகுதிகளில் 51 கோவில்களில் தினசரி சடங்குகள் புத்துயிர் பெற்றுள்ளன. இன்றைக்கு, 10 - 15 லட்சம் பேர் கோவில் கோவிலாக, உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.நிகழ்ச்சியில் 'கலைமகள்' ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் பேசுகையில், ''எந்த கோவில்களுக்கு எந்த உதவி வேண்டும்; அவற்றை யார் செய்ய வேண்டும் இந்த இரண்டையும் இணைக்க கூடிய இணைப்பு பாலமாக, இன்பினிட் சேவா தலைவர் நளினி பத்பநாபனும், பத்பநாபனும் உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை