உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் ஹாரிங்டன் வாரியர்ஸ் அபாரம்

புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் ஹாரிங்டன் வாரியர்ஸ் அபாரம்

சென்னை, புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில், பீனிக்ஸ் மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியை தோற்கடித்தது.சென்னையில், 'தி புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி' சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், ஹாரிங்டன் வாரியர்ஸ் மற்றும் பீனிக்ஸ் மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின.'டாஸ்' வென்ற ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 146 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய பீனிக்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து, அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹாரிங்டன் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி