உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஆர்.டி.ஐ., வாயிலாக அம்பலம்

மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஆர்.டி.ஐ., வாயிலாக அம்பலம்

சென்னை, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்புக்கு பின், 54 கி.மீ., தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 63,246 கோடி ரூபாய் மதிப்பில் 116.1 கி.மீ., துாரத்திற்கு, மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.கடந்த 2021 -- 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனுடன் சேர்த்து பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 14,788 கோடி ரூபாய் நிதியும், கொச்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப்பணிகளுக்கு 1,957 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.தவிர, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 5,976 கோடி ரூபாய் நிதியும், நாசிக் மெட்ரோ திட்டத்துக்கு 2,092 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சென்னை, நாசிக் மெட்ரோ ரயில் திட்டங்களை தவிர்த்து, இதர மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும், மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.அதன்படி, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 18,978 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.இது குறித்து, சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, நிதி ஒதுக்கவில்லை என்ற தகவல், ஆர்.டி.ஐ.,யில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், கொச்சி, பெங்களூரு, நாக்பூர் ஆகிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்டம் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான நிதியை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை