திட்டமிடலில்லாத வடிகால் மாநகராட்சியின் சாதனை
ஆழ்வார்பேட்டை, சென்டாப் 2வது தெருவில், மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டன. தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த வடிகால் அனைத்தும், கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளன. இதனால், வடிகாலில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இது குறித்த தொடர் புகாரை அடுத்து, மோட்டார் பயன்படுத்தி, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குழாய் வாயிலாக, மேன் ஹோலில் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட வடிகால் மாநகராட்சியின் சாதனை.- சிவராமன், ஆழ்வார்பேட்டை.