உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் கிடந்த ரூ.10,000 ஒப்படைத்த ஓட்டுனர்

சாலையில் கிடந்த ரூ.10,000 ஒப்படைத்த ஓட்டுனர்

பெரம்பூர், பெரம்பூர் நெடுஞ்சாலையில் எவர்வின் பள்ளி முன், நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில் ஓட்டேரியில் இருந்து பெரம்பூர் நோக்கி பைக்கில் பயணித்த நபரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 500 ரூபாய் நோட்டுகளாக 10,000 ரூபாய் கீழே விழுந்து உள்ளது. பின்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்களான பெரம்பூரைச் சேர்ந்த சகாயராஜ்,55 மற்றும் அயனாவரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன்,52 ஆகியோர் இதைப் பார்த்தனர். பைக்கில் சென்றவரை தடுக்க குரல் கொடுத்தனர். அவர் கவனிக்காமல் சென்றதால், பணத்தை மீட்டனர்.சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை ஒப்படைக்க முடியாத நிலையில், அதை ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பணத்துக்கு உரியவரை போலீசார் தேடி வருகின்றனர். பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை