உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலைய வாசலில் கழுத்தை அறுத்த ரவுடி

காவல் நிலைய வாசலில் கழுத்தை அறுத்த ரவுடி

கண்ணகிநகர், கண்ணகிநகரை சேர்ந்தவர் சிவகுமார், 28. இவர் மீது, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் வந்தார்.மனைவி பிரியாவுடன் தகராறு செய்துள்ளார். தினமும் அடித்து உதைத்ததால், பிரியா நேற்று, கண்ணகிநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சிவகுமாரை காவல் நிலையம் அழைத்தனர்.வரும்போது, காவல் நிலைய வாசலில் வைத்து, கத்தியால் தன் கழுத்தை சிவகுமார் அறுத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணகிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை