உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீலை வெட்டிய ரவுடிகள் கைது

வக்கீலை வெட்டிய ரவுடிகள் கைது

கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 41, வக்கீல். இவர் கடந்த 16ம் தேதி நள்ளிரவு, கொடுங்கையூர், சிட்கோ நகர் வழியாக பைக்கில் தன் நண்பர் சசிகுமார் என்பவருடன் சென்றார்.அவ்வழியே வந்த மர்ம நபர் கும்பல் செந்தில்குமாரை இரும்பு கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தினர். செந்தில்குமார் தலையிலும், சசிகுமார் காலிலும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொடுங்கையூரை சேர்ந்த ராஜேஷ்குமார், 32, ரஞ்சித், 36 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை