உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி கொள்ளையர் கைது

வழிப்பறி கொள்ளையர் கைது

கிண்டி, கல்லுாரி மாணவர் ராமச்சந்திரன், 19, என்பவர் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிண்டி எஸ்டேட், பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஒரு கும்பல் ராமச்சந்திரனை மிரட்டி மொபைல் போனை பறித்துச் சென்றது.அதேபோல, பரமேஸ்வரன், 50 என்பவர், ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அவரிடமும் அந்த கும்பல் மொபைல் போன் பறித்துள்ளது.புகாரின்படி, கிண்டி போலீசார் விசாரித்தனர். பரமேஸ்வரனிடம் மொபைல்போன் பறித்து, பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. இதன் அடிப்படையில்நடந்த விசாரணையில், வழிப்பறி செய்த பரங்கிமலை, நசரத்புரம் பகுதியைச் சேர்ந்த அஷ்வின்குமார், 24, ஏழுமலை, 22, ஜெயபிரகாஷ், 20, விக்னேஷ், 19, ஆகியோர் சிக்கினர். நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி