உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மசூதி அருகில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் அவதி

மசூதி அருகில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் அவதி

அண்ணா நகர்:அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், மூன்றாவது அவென்யூவில், மசூதி செயல்படுகிறது. அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இஸ்லாமியர் ஏராளமானோர், தொழுக சென்று வருகின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், நடைபாதையில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன், 56, கூறியதாவது:பண்டிகை காலம் என்பதால், தினமும் மூன்று வேலை மசூதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளனர்.அப்பகுதியில் கடை நடத்துவோர், நடைபாதையை ஆக்கிரமிப்பதால் கடும் அவதியாக உள்ளது. தொழுகைக்கு வருவோர் மட்டுமின்றி, பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து, '1913' எண்ணை அழைத்து, மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி