உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் எந்நேரமும் விபத்து அபாயம்

கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் எந்நேரமும் விபத்து அபாயம்

கீழ்ப்பாக்கம்:கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு, 'ஏ' முதல் 'கே' மற்றும் 'எஸ்' முதல் 'கியூ' டி.ஐ.ஜி., 1, 2, டி.சி., 1, 2 ஆகிய பிளாக்களில், 434 குடியிருப்புகள் உள்ளன.இக்குடியிருப்புகளில், நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும், போலீஸ்காரர்கள், எஸ்.ஐ., உட்பட உயர் அதிகாரிகள், பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இக்குடியிருப்பில் போதிய பராமரிப்பு கிடையாது. குடியிருப்பு வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்களின் கூடாரமாக காட்சியளிக்கிறது.இது குறித்து, குடியிருப்பில் வசிக்கும் போலீசார் கூறியதாவது:கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, கடந்த,1974ல் முதல் பல்வேறு பல்வேறு பிளாக்கள் கட்டப்பட்டு, போலீஸ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பு வாசிகளிடம், மாதம் 300 - 500 ரூபாய் வரை பராமரிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப எந்த அடிப்படை வசிகளும் இங்கு கிடையாது. குறிப்பாக, சுற்றுச்சுவர்கள் உடைந்து, கீழே விழும் நிலையில் உள்ளது.மழைக்காலம் வந்தலே, வளாகத்தில் மழைநீர் தேங்கும் என்பதால், உறவினர் வீடுகளில் தஞ்சம் கொள்கிறோம். பல போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பிளாக் வாரியாக, குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கலாம். இப்பிரச்னைகளை கருத்தில் வைத்து, குடியிருப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை