உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமாவளவன் கோர்ட்டில் ஆஜர்

திருமாவளவன் கோர்ட்டில் ஆஜர்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில், ஆதிதிராவிடர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியிலுள்ள, பஞ்சமி நிலம் மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடக்கும். கடந்த 2021ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தனியார் நிலம் வழியாக சென்றனர். அப்போது அந்த நிலத்தை, சேதப்படுத்தியதாக காரணை பகுதியைச் சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. திருமாவளவன் உள்ளிட்ட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அவர்கள் மீதான வழக்கை பதிவு செய்து, வரும் அக்., 1ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை