உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுனரை தாக்கியோர் கைது

ஆட்டோ ஓட்டுனரை தாக்கியோர் கைது

ஓட்டேரி, ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் தீபன்ராஜ், 27; ஆட்டோ ஓட்டுனர். இவர், பெரம்பூர் ஜமாலியா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து சவாரி செல்வது வழக்கம்.இதே, ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள இளவரசன், கவுதம், சசிகுமார் ஆகியோருக்கும் தீபன் ராஜுக்கும் முன்விரோதம் இருந்தது.இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை தீபன்ராஜ் அவ்வழியாக சென்றபோது, மதுபோதையில் இருந்த கவுதம், சசிகுமார், இளவரசன் ஆகியோர், தீபன்ராஜிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.அக்கம்பக்கத்தினர் தீபன்ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.விசாரித்த ஓட்டேரி போலீசார், அயனாவரத்தைச் சேர்ந்த இளவரசன், 22, கவுதம், 19, மற்றும் சசிகுமார், 29, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்