உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டிப்பு லாபம் ஆசை காட்டி ரூ.1 கோடி ஏமாற்றிய மூவர் கைது

இரட்டிப்பு லாபம் ஆசை காட்டி ரூ.1 கோடி ஏமாற்றிய மூவர் கைது

வேப்பேரி, சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.அதன் விபரம்:சூளைமேடு, திருவள்ளூர்புரம், சண்முகனார் சாலையில் 'கேபிடல் கெயின்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், 100 நாட்களில் இரட்டிப்பாக லாபம் தருவதாக கூறினர்.தினம் 2,000 ரூபாய் வீதம் கட்டினால் 100 நாட்களில் முதலும் வட்டியும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி, நானும், என் உறவினர்கள், நண்பர்கள் என, 43 பேரும், 1.12 கோடி ரூபாயை முதலீடு செய்தோம். முதலில் சில நாட்கள் மட்டுமே லாப பங்கீடு என, பணம் அனுப்பினர். பின், நிறுவனத்தினர் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். பண மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இது குறித்து வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வாளர் பிரபா தலைமையில் தனிப்படை போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட, தர்மராஜா, சாம்நாத், விஜயகுமார் ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.கைது செய்தோரிடம் இருந்து போலி நிறுவனத்தை நடத்த பயன்படுத்திய சீல்கள், ஆவணங்கள் மற்றும் ஏமாற்றிய பணத்திலிருந்து கிரையம் பெற்ற 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பத்திரம் ஆகியவற்றையும், போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

suresh guptha
ஜூன் 27, 2024 16:54

I DON T FIND FAULT ON THE PERSON WHO CHEATED,PL THINK HOW IT IS POSSIBLE TO GIVE THAT RETURN EVEN IF U DO ILLEGAL BUSINESS ALSO U CANT PAY AND ALSO OUT OF INVESTMENT FIRST 2 TO 3 WEEKS THEY MIGHT RECOVERED 50 TO 60 PERCENT AND NET LOSS IS BALANCE 40 PERCENT,U HAVE TO ANALYSE LIKE THIS AFTER ENJOYING THE HIGH RETURN IF U SAY I HAVE LOST IT IS RIDICULOUS AND THIS SHOULD BE VERFIEY BY INCOME TAX DEPT


Kalyanaraman
ஜூன் 27, 2024 07:19

இந்த வழக்கு முடிவதற்கு நீதிமன்றத்தில் 30-40 வருடங்கள் ஆகலாம். அதற்குள் குற்றவாளி இறந்து விடுவார், கேஸ் அம்போ மக்களை காக்க வேண்டிய சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றவாளிகளிகளை காப்பது மட்டுமின்றி புதிய குற்றங்களை செய்ய குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது & உருவாக்குகிறது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ