உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது விற்பனை பெரம்பூரில் மூவர் கைது

மது விற்பனை பெரம்பூரில் மூவர் கைது

பெரம்பூர், பெரம்பூர் பாக்சன் தெருவில், கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதாக, செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, குறிப்பிட்ட முகவரியில் வேளாங்கண்ணி, 28, என்பவரின் வீட்டை சோதனையிட்டனர்.அப்போது, மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், ஓட்டேரி, டோபிகானா பகுதியிலும், மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்ற, ஓட்டேரியை சேர்ந்த காட்டுரோஜா, 65, வினோத், 27, ஆகியோரை, ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.மேலும், தலைமறைவான ஆஷா என்பவரை தேடி வருகின்றனர். இதில், காட்டுரோஜா மீது, ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை