உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் துாங்கிய ஓட்டுனரிடம் போன் பறித்த மூவர் கைது

காரில் துாங்கிய ஓட்டுனரிடம் போன் பறித்த மூவர் கைது

தாம்பரம்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 33; கார் ஓட்டுனர். நேற்று அதிகாலை சவாரி முடித்து, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், ரயில்வே கிரவுண்ட் அருகே காரை நிறுத்தி துாங்கிக்கொண்டிருந்தார்.அங்கு வந்த மர்மநபர்கள் மூவர், காரின் கதவை திறந்து மொபைல் போனை திருடிய போது, லட்சுமணன் விழித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதையடுத்து, அங்கிருந்த சக ஓட்டுனர்கள் உதவியுடன் மூன்று பேரையும் மடக்கி பிடித்து, சேலையூர் காவல் நிலையத்தில் ஓப்படைத்தார். விசாரணையில் மொபைல் போன் திருடியது துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், 29, துரை மணி, 29, சூர்யா, 21, என்பது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார், ஐந்து மொபைல் போன்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்