மேலும் செய்திகள்
48 வழக்குகளில் தொடர்புடைய பெண் கைது
15-Feb-2025
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 31; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்துாரிபாய் காலனி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே வந்த மூவர் தினேஷை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தினேஷ் பணம் இல்லை எனக்கூறவே, அவரை சரமாரியாக தாக்கி, 500 ரூபாயை பறித்து சென்றனர்.இது குறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, புளியந்தோப்பு கஸ்துாரிபாய் காலனியைச் சேர்ந்த ‛பிள்ளை' கார்த்திக், 32, வினோத், 32, மற்றும் சூர்யா, 23, ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
15-Feb-2025