உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு

நாளை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு

சென்னை:லோக்சபா தேர்தல், தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடந்தது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, தென்சென்னையில் 54.17 சதவீதம், மத்திய சென்னையில் 53.96 சதவீதம் மற்றும் வட சென்னையில் 60.11 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது.ஓட்டு எண்ணிக்கை, நாளை நடைபெற உள்ளது. தென்சென்னைக்கு, கிண்டி அண்ணா பல்கலையிலும், மத்திய சென்னைக்கு நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரியிலும், வடசென்னைக்கு ராணிமேரி கல்லுாரியிலும் ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.தபால் ஓட்டு எண்ணும் அறை, மின்னணு ஓட்டுப்பதிவு எண்ணும் அறை, ஊடக மையம், மின்சார வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, உணவு ஏற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.ஒவ்வொரு தொகுதியிலும், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு பொது பார்வையாளரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. அவர்கள், சென்னை வந்துள்ளனர்.ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். வன்முறையில் ஈடுபடுவோரை ஒடுக்க 'வஜ்ரா' உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படும் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொகுதி சட்டசபை தொகுதிகள் பொது பார்வையாளர் பெயர் மொபைல் எண்

வடசென்னை திருவெற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி 94459 10953வடசென்னை பெரம்பூர், கொளத்துார், திரு.வி.க.நகர் ராஜேஷ்குமார் 94459 10932மத்திய சென்னை வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் ஜிதேந்திரா ககுஸ்தே 94459 10940மத்திய சென்னை சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் சுரேஷ் 94459 10956தென்சென்னை விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் முத்தாடா ரவிசந்திரா 9445910957தென்சென்னை மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் முகமதுசபீக்சக் 9445910945


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ