மேலும் செய்திகள்
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
16-Feb-2025
அனகாபுத்துார், அனகாபுத்துாரில் இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தினர் வாழை, கற்றாழை, அண்ணாசி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களை கொண்டு, புடவை, பேக், பேண்ட், சட்டை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டினர், இங்கு தயார் செய்யப்படும் புடவைகளை ஆர்வத்துடன், ஆன்லைன் வயிலாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.மற்றொரு புறம், மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகளில், இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு கைவினை பொருட்கள் அபிவிருத்தி கழகம் மற்றும் இந்திய கைவினை துறை அமைச்சகம் இணைந்து, இக்குழுமத்தினருக்கான ஒரு மாத பயிற்சியை துவங்கியுள்ளது. வாழை நாரில் இருந்து புதுமையாக அலங்கார விளக்கு, புத்தக கவர், பை, பூஜை கூடை, வளையல், ஜிமிக்கி, நெக்லஸ், யோகா மேட், அலங்கார வளைவு, வாட்டார் பாட்டில் பை, தலையணை கவர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, நாள்தோறும், 300 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, இயற்கை நார் நெசவு குழு செயலரை, 98415 41883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
16-Feb-2025