உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜூஸ் கடைக்காரரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது

ஜூஸ் கடைக்காரரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது

அமைந்தகரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ரவி, 52. இவர் அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த மூவர் ஜூஸ் குடித்து விட்டு பணம் அளிக்காமல் செல்ல முயன்றனர். அவர்களிடம் பணம் கேட்ட போது, மூவரும் சேர்ந்து ரவியை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி 2,500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி அமைந்தகரை போலீசார் விசாரித்தனர். சலீம்பாஷா, 31; ரபி, 35 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சலீம்பாஷா மீது மூன்று மற்றும் ரபி மீது 2 குற்ற வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ