உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

வேளச்சேரி:வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகர், ஏழாவது தெருவில், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்த இருவரை, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில், 490 வலி நிவாரணி மாத்திரைகள், 1.6 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சம் ரூபாய் இருந்தது.இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 25, வேளச்சேரி உதயகுமார், 23, ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், சூர்யா மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி, என 12 வழக்குகளும், உதயகுமார் மீது திருட்டு, மற்றும் கஞ்சா விற்பனை என, ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalpana Krishnan
ஜூலை 22, 2024 10:16

உண்மையான உலக செய்தி மற்றும் நடுத்தரம் வர்த்தக நாட்டுல நடக்கர உண்மையான செய்திகள் ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை