உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டிப்பு பணம் தருவதாக ஏமாற்ற முயன்ற இருவர் கைது

இரட்டிப்பு பணம் தருவதாக ஏமாற்ற முயன்ற இருவர் கைது

கோயம்பேடு, கோயம்பேடில், இரட்டிப்பு பணம் தருவதாக, ரூபாய் நோட்டுகளுக்கு இடையில் வெள்ளை தாள்களை வைத்து மோசடி செய்ய முயன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர். சென்னையில், இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களை மர்ம கும்பல் மோசடி செய்து வருவதாக, தெற்கு மண்டலம் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அத்துறை ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார், தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கும்பல், கோயம்பேடில் 10 லட்சம் ரூபாயுடன் இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று கண்காணித்தனர்.அப்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.அந்த பணத்தை சோதனை செய்த போது, பணக்கட்டில் மேல் மற்றும் கீழ்ப்பகுதியில் அசல் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, இடையில் வெள்ளை தாள்கள் வைக்கப்பட்டு இருந்தன.மேலும், 5 லட்சம் ரூபாய் கொடுக்கும் நபர்களிடம், 10 லட்சமாக கொடுக்க, இவர்கள் காத்திருந்தது தெரிந்தது. இவர்களிடம் விசாரித்ததில் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஆசிக், 22, புதுக்கோட்டை மாவட்டம், வீதி காமராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல், 52, என தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் இருப்பது போல், வெள்ளத்தாள் இடையில் வைத்து எடுத்து வந்த, 48 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் வெள்ளை தாள்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இருவரையும், கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். இருவரிடமும் கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை