| ADDED : மே 12, 2024 12:05 AM
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன், 50. சென்ட்ரிங் வேலை செய்தார். இவர், நேற்று காலை 'யமஹா ரே' இருசக்கர வாகனத்தில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்றார்.அப்போது, திருக்கச்சூர் அடுத்த தெள்ளிமேடு பகுதியில் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பம்மாள், 48, என்பவர் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். ஆப்பூர் அடுத்த சேந்தமங்கலம் அருகே சென்றபோது, ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி வந்த 'மாருதி பலேனோ' கார், சேந்தமங்கலம் சந்திப்பில் வேகமாக திரும்பியது. காரை மணிமங்கலத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், 48 என்பவர் ஓட்டி வந்தார்.அப்போது, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வீரபத்திரன், குப்பம்மாள் இருவரும் பலத்த காயமடைந்தனர். பாலுார் போலீசார் இருவரையும் மீட்டு '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.