உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலில் மூழ்கி மாணவர் பலி இருவர் மாயம்

கடலில் மூழ்கி மாணவர் பலி இருவர் மாயம்

மாமல்லபுரம், சென்னை, அண்ணா நகர் தனியார் கல்லுாரி மாணவர்கள் 17 பேர், நேற்று மதியம், மாமல்லபுரத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்தனர். மாலை 3:00 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி அருகில், கடலில் குளித்தனர்.இதில், பி.காம்., இறுதியாண்டு படிக்கும், அயனாவரத்தைச் சேர்ந்த ரோஷன், 21, சேத்துபட்டு கவுதம், 19, திண்டிவனத்தைச் சேர்ந்த பிரகாஷ், 19, ஆகிய மூவரும், அலையில் சிக்கி மூழ்கினர்.கரை அருகில் இருந்த ரோஷனை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். கடலில் மாயமான மற்ற இரண்டு மாணவர்களை போலீசார், தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி