வியாசர்பாடி ரவுடி இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 23. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதனால், கடந்த 2020 அக்., 8ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, 31, ஜெகதீஸ்வரன், 23, ஆகியோர், சதீஷை கத்தியால் வெட்டினர்.பலத்த காயமடைந்த சதீஷ், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். வியாசர்பாடி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கில், விக்கி, ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 5,000 அபராதமும் விதித்து சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பளித்தது.