உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்கலை மண்டல கால்பந்து எத்திராஜ் கல்லுாரி சாம்பியன்

பல்கலை மண்டல கால்பந்து எத்திராஜ் கல்லுாரி சாம்பியன்

சென்னை:சென்னை பல்கலையில் இடம்பெற்றுள்ள கல்லுாரிகள், மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், பெண்கள் கால்பந்து போட்டியில், மண்டல அளவில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் அணிகள் இடையிலான போட்டி, குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி மைதானத்தில் நடந்தது.இதன் முதல் சுற்று போட்டியில், எத்திராஜ் கல்லுாரி வீராங்கனையர் 4 - 0 என்ற கோல் கணக்கில், எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி அணியை வீழ்த்தினர். அடுத்த ஆட்டத்தில் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.தொடர்ந்து நடந்த மூன்றாவது சுற்று போட்டியில், 'பி' மண்டல கூட்டு அணியுடன் பலப்பரீட்சை நடத்திய எத்திராஜ் கல்லுாரி அணியினர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 13 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி