உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பெசன்ட் நகர்,சென்னையில் புகழ் பெற்ற, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச் 52ம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து, 'நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்' என்ற தலைப்பில், சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. காலை முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். கொடியேற்ற நிகழ்வில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இவ்விழாவை, கோவில் பங்கு பேரவை மற்றும் அன்பியங்கள், பங்கு மக்கள் முன்னின்று நடத்தினர். பாதுகாப்பு பணியில், 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மொத்தம், 60 கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு உள்ளன.இன்று, 'விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே' என்ற தலைப்பில், கூட்டு திருப்பலி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில், திருப்பலி நடக்கிறது. செப்., 7ல் தேர்பவனி மற்றும் 8ல் கொடியிறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது.

100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச் திருவிழாவிற்கு, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, பயணியர் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வரும் 8ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவிற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பயணியரின் வசதிக்காக பெரம்பூர், எண்ணுார், தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.பயணியர் நெரிசல் மிக்க நேரங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, பேருந்துகள் வந்து செல்வதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை