உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரிவாக்கம் சாலையில் வடிகால் அமைக்கப்படுமா?

பாரிவாக்கம் சாலையில் வடிகால் அமைக்கப்படுமா?

பூந்தமல்லி:பாரிவாக்கம் சாலையில், மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை, பூந்தமல்லி அருகே, பாரிவாக்கம் ஊராட்சி உள்ளது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து பாரிவாக்கம் செல்லும் பிரதான சாலை வழியே பாரிவாக்கம், வயலாநல்லுார், சோராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.பாரிவாக்கம் பிரதான சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், சிறு மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ