அம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
குன்றத்துார் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சியில், சாலையோரம் கடும்பாடி அம்மன் கோவில் குளம் உள்ளது. அந்த பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த குளம், பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. குளத்தைச் சுற்றி ஆக்கிரப்பு அதிகரித்து, குளம் சுருங்கியுள்ளது. குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குளத்தில் கலந்து வருவதால், இந்த குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும்.-- என்.சிவா,கெருகம்பாக்கம்.