சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் தேவராஜ், 60; கட்டட தொழிலாளி.இவர், எம்.கே.பி.நகர், 17வது மேற்கு குறுக்கு தெருவில் உள்ள பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில், நேற்று ஈடுபட்டார். முற்பகல் 11:30 மணியளவில், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தேவராஜ் உயிரிழந்தார்.எம்.கே.பி.நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.