உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யோகா தினம் சிறப்பு ஏற்பாடு

யோகா தினம் சிறப்பு ஏற்பாடு

தாம்பரம், சர்வதேச யோகா தினம், ஜூன், 21ல் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 'சுய மற்றும் சமூகத்திற்கான யோகா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், கூட்டு யோகா பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.சித்த மருத்துவ நிறுவனத்தின் ஆசிரியர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து, கூட்டு யோகா பயிற்சிகளை நிகழ்த்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை