உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

அம்பத்துார்,அம்பத்துார், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 32; தச்சர். இவரது மனைவி பத்மா, 28. இரண்டு குழந்தைகள் உள்ளன.பச்சையப்பன், நேற்று முன்தினம் இரவு, போர்வெல் மோட்டார் சுவிட்ச் 'ஆன்' செய்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !