உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 102 சாலை பணிகள் நிறைவு

102 சாலை பணிகள் நிறைவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 19.94 கோடி ரூபாய் செலவில், ஐந்து மண்டலங்களிலும், 253 உட்புற சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பம்மல் மண்டலத்தில், 65 தார் சாலை மற்றும் 8 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. பல்லாவரம் மண்டலத்தில், 11 தார் சாலைகள் மற்றும் 3 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. செம்பாக்கம் மண்டலத்தில், 10 தார் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பெருங்களத்துார் மண்டலத்தில், 5 தார் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், 102 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை