திருவள்ளூர், கும்மிடி தடத்தில் 12 பெட்டி மின்சார ரயில்கள்
சென்னை, சென்னை - திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களை, 12 பெட்டிகளாக மாற்றும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக, ரயில் நிலையங்களில் நடைமேடை விரிவாக்க பணிகள், புதிய மின்சார ரயில்கள் இணைப்பது போன்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று முதல் சென்னை - திருவள்ளூர் -- கும்மிடிப்பூண்டி தடங்களில் இயக்கப்படும் 42 மின்சார ரயில்களும், 12 பெட்டிகளாக இணைத்து இயக்கப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இந்த தடத்தில் பயணியர் நெரிசலின்றி பயணம் செய்ய முடியும். ஏற்கனவே இந்த தடத்தில் இயக்கப்பட்டு வந்த 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள், வேறு வழித்தடங்களில் மாற்றி விடப்பட்டுள்ளது. ***