உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுாருக்கு 9 நாளில் வந்த 1.20 லட்சம் பேர்

வண்டலுாருக்கு 9 நாளில் வந்த 1.20 லட்சம் பேர்

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டதால், இரண்டு ஆண்டுகளாக, காணும் பொங்கல் அன்று எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லை.கடந்த காணும் பொங்கல் அன்று, 23,000 பேர் வருகை புரிந்தனர். இந்த காணும் பொங்கல் அன்றும், 23,000 பேர் மட்டுமே வந்தனர். அதேநேரம், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொடர் விடுமுறை ஏற்பட்டதால், ஜன., 11 முதல் ஜன., 19 வரை, ஒன்பது நாட்களில், 1.20 லட்சம் பார்வையாளர்கள், பூங்காவை கண்டு ரசித்துள்ளனர். பார்வையாளர்களின் வசதிக்காக, பூங்கா நிர்வாகம், பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி