உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்

மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்

சென்னை, மழை பாதித்த, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இரண்டு நாட்களில், 108 ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, 1,300க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக, 468 ஆம்புலன்ஸ்கள்; 22 பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, 1,000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த நான்கு மாவட்டங்களிலும், இரு நாட்களில், 1,514 அழைப்புகள் வந்தன. அதில், 1,304 அழைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு, 506 நோயாளிகள் மாற்றப்பட்டனர். கர்ப்பிணியர் மற்ற உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட, 798 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மழையால் விபத்தில் சிக்கிய 35 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை