உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 13.50 லட்சம் பேர் வெளியூர் பயணம்

13.50 லட்சம் பேர் வெளியூர் பயணம்

சென்னையில் இருந்து, கடந்த மூன்று நாட்களில், அரசு பஸ்களில், 7 லட்சம் பேர், ரயில்களில், 4.5 லட்சம் பேர், ஆம்னி பஸ்களில் 1.50 லட்சம் பேர்; சொந்த வானங்களில் ஒரு லட்சம் பேர் என, 13.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.இன்றும், சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவதால், மேலும் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பஸ்கள் படுமோசம் : தவித்த பயணியர்

முன்பதிவில்லாத பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிமனைகளில் பலகாலம் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை, மாற்று பேருந்துகளாக மாற்றி இயக்க அனுமதித்ததனர். அவை, பாதி வழியில் நின்றும், ரேடியேட்டரில் புகைவந்து பயணியரை அச்சுறுத்தின; முகப்பு விளக்குகள் எரியாமல் ஓட்டுனர்கள் அல்லாடலும் நடந்தது. பழுதான பஸ்களுக்கு பதிலாக வரவழைக்கப்பட்ட மாற்றுப்பேருந்துகளில், லக்கேஜ் வைப்பதற்கான வசதிகளோ, சாயும் இருக்கை வசதிகளோ இல்லாததால், தங்களின் டிக்கெட்டுகளையும், பஸ்களின் நிலைமை, குடும்பத்துடன் பயணித்தோர் பட்ட அவதிகளையும், சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை