மேலும் செய்திகள்
வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்
01-May-2025
பட்டரைவாக்கம், :பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது.மேடவாக்கம் கூட்ரோடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 19, இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்துவந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
01-May-2025