உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது அனகாபுத்துார் அருகே 140 கிலோ கஞ்சா பறிமுதல்

பொது அனகாபுத்துார் அருகே 140 கிலோ கஞ்சா பறிமுதல்

பம்மல், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் பகுதியில், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், சில்லரை கஞ்சா வியாபாரிகள் கொடுத்த தகவலின் பேரில், அனகாபுத்துாரில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த, ஆந்திர மாநிலம், அனகபள்ளியைச் சேர்ந்த அப்பளநாயுடு, 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்பளநாயுடு, கஞ்சாவை மொத்தமாக வாங்கி, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி