உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரம்பூர் சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம்

பெரம்பூர் சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம்

திரு.வி.க.நகர்: பெரம்பூர் சாலையில், 15 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திரு.வி.க மண்டலத்திற்குட்பட்ட 76வது வார்டு பெரம்பூர், பேரக்ஸ் சாலை அஷ்டபுஜம் சாலை சந்திப்பு பகுதியில், நேற்று மாலை திடீரென 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. தகவல் அறிந்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ., தாயகம் கவி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.இன்று பள்ளம் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை