தாம்பரத்தில் 152 சாலை பணி நிறைவு
தாம்பரம், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 19.74 கோடி ரூபாய் செலவில், 195 தார் சாலைகள் மற்றும் 58 சிமென்ட் சாலைகள் என, 253 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில், 1வது மண்டலத்தில், 7.45 கோடி ரூபாய் செலவில், 77 தார் மற்றும் 2.23 கோடி ரூபாய் செலவில் 20 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டு உள்ளன.அதேபோல் 2வது மண்டலத்தில், 93 லட்சத்தில், 14 தார் சாலை; 29 லட்சத்தில் 3 சிமென்ட் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன.மூன்றாவது மண்டலத்தில், 1.65 கோடியில் 25 தார் சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. 4வது மண்டலத்தில் 66 லட்சத்தில், 12 தார் சாலை, 1 சிமென்ட் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.