உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் முருகன் கோவிலில் 16 மூத்த தம்பதியர் சிறப்பிப்பு

குன்றத்துார் முருகன் கோவிலில் 16 மூத்த தம்பதியர் சிறப்பிப்பு

குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், 16 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தி அடைந்த, ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியருக்கு, கோவில் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம், நேற்று துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், குன்றத்துாரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 70 வயது பூர்த்தி அடைந்த, 16 தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, கோவில் சார்பில், 16 மூத்த தம்பதியினருக்கும் வேட்டி, சட்டை, புடவை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா, ஜெயகுமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை