உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆண்டுதோறும் 18 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு

ஆண்டுதோறும் 18 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு

சென்னை:நாட்டில் ஆண்டுதோறும், 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பக்கவாதத்தால் புதிததாக பாதிக்கப்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறினர்.உலக பக்கவாத தினத்தையொட்டி, சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மருத்துவமனையின் சீனியர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம், சீனியர் நரம்பியல் நிபுணர் அருள்செல்வன் ஆகியோர் கூறியதாவது:நம் நாட்டில், 2011ல் பக்கவாதத்தால், 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, 18 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாத பாதிப்பு இருப்பது தெரிய வந்த உடனே, சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். பாதிப்பு ஏற்பட்ட முதல், 4 - 5 மணி நேரத்தை மருத்துவ உலகில், 'கோல்டன் ஹவர்' என்பர். தக்க தருணத்தில் பக்கவாத பாதிப்பிற்கான சிகிச்சை அளிப்பதால், உடல் செயல்பட இயலாத நிலையைக் குறைப்பதிலும், பாதிப்புகளிருந்து மீண்டு வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதிலும், நல்ல முன்னேற்றம் இருக்கும்.பக்கவாதம் என்பது நோயாளிகளுக்கு மட்டுமல்ல; அவர்களின் குடும்பங்களுக்கும் பெரும் பாதிப்புகளையும், இடர்பாடுகளையும் உருவாக்கி விடும். அப்பல்லோ மருத்துவமனைகளில், பாதிப்பு ஏற்பட்ட உடனேயே துரிதமாக மேற்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு, மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ