உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி

ஓட்டேரி: ஓட்டேரி, குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் அபினாஷ், 30. இவரது மனைவி உஷா, 28.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அபினாஷ் வீட்டின் ஹாலிலும், உஷா, பிள்ளைகள் லிங்கேஸ்வரன், 3, நகுலேஸ்வரன், 2, மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையுடன், கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார்.நேற்று காலை கண் விழித்த உஷா, 2 வயது மகன் நகுலேஸ்வரன், கட்டிலில் இருந்து தவறி விழுந்து, தரையில் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மகனை துாக்கி சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நகுலேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், பெற்றோரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை