உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 2022 அக்., 14ல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்கு வந்த தாய்மாமா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் தாய் புகார் அளித்தார்.'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 36 வயதான தாய்மாமாவை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றம் சாட்டப்பட்டவர் மீது, சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளனஎனவே, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாயை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி