உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, தெலுங்கானா மாநிலம், காச்சிகுடாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில், நேற்று காலை 7:00 மணிக்கு எழும்பூர் வந்தது. இந்த ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் பெட்டிக்குள் யாரும் உரிமை கோரப்படாத இரண்டு பேக்குகள் இருந்தன. அதை திறந்து பார்த்த போது, 16 பண்டல்கள் இருந்தன. அவற்றில், 21 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 10.50 லட்சம் ரூபாய். ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபரை, 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை