வீட்டு அலமாரியில் 25 சவரன் மாயம்
ஓட்டேரி: ஓட்டேரி, எஸ்.ஆர்.பி., சிட்டி குடியிருப்பை சேர்ந்தவர் சாந்தினி, 44. இவர், கடந்த 2ம் தேதி வீட்டில் உள்ள அலமா ரியில், தாலி செயின் உட்பட 25 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டு செலவிற்காக பணம் எடுக்க சென்றபோது, அலமாரியில் இருந்த நகையும், பணமும் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், வீட்டு வேலை செய்து வரும் சங்கீதாவிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரை அடுத்து, ஓட்டேரி போலீசார் சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.