உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 250 கிலோ கொழுக்கட்டை சவீதா கல்லுாரியில் சாதனை 

250 கிலோ கொழுக்கட்டை சவீதா கல்லுாரியில் சாதனை 

சென்னை, திருவேற்காடு, சவீதா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், 250 கிலோ கொழுக்கட்டை படைத்து உலக சாதனை ஏற்படுத்தப்பட்டது. சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில், சவீதா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, மருத்துவமனை வாயில் மற்றும் வெளி சுற்றுப்புற முகப்பு சுவரில், பல் மருத்துவத்தை விளக்கும் வகையில், 108 விநாயக பெருமானின் கையில் பல் மருத்துவத் துறைகள் சார்ந்த கருவிகளுடன் காட்சியளிக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோபுரத்தின் மீது, நர்த்தன விநாயகரும், கல்லுாரி கட்டடத்தின் மீது முருகக் கடவுளும், பல் மருத்துவத்தில் பயன்படும் கருவிகளை பிடித்திருப்பது போல், சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, பக்தி மற்றும் புதுமையை ஒருங்கே கொண்டாடும் விதமாக, சவீதாவின் 'டெம்பிள் ஆப் டென்டிஸ்ட்ரி' சார்பில், 250 கிலோ எடையுள்ள மிகப்பெரிய கொழுக்கட்டை நேற்று விநாயகருக்கு படைக்கப்பட்டது. இது ரபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன், துணைவேந்தர் டாக்டர் அஷ்வினி குமார், சார்பு வேந்தர் டாக்டர் தீபக் நல்லசாமி, பதிவாளர் டாக்டர் சீஜா வர்கீஸ், டீன் டாக்டர் அரவிந்த் குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை