உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அஞ்சல் ஊழியர்கள் 262 பேருக்கு விருது

 அஞ்சல் ஊழியர்கள் 262 பேருக்கு விருது

சென்னை: அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், 262 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்திய அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம் சார்பில், 'மண்டல மேன்மை விருதுகள் 2024 - 25' விருதுகள் வழங்கும் விழா, சென்னை பெரியமேடில் உள்ள விக்டோரியா பொது மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் , இந்திய அஞ்சல் துறையில், தமிழகம் முழுதும் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 77 பிரிவுகளின் கீழ், மொத்தம் 262 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர் . சென்னை நகர மண்டல அஞ்சலக சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ் வரவேற்புரைஆற்றினார். தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கவுரவ ஆலோசகர் டாக்டர் டி.சங்கர சரவணன் முதன்மை விருந்தினராக பங்கேற்று, சிறப்பாக பணிபுரிந்த அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறியதாவது: அஞ்சல் துறை பணியாளர்களின் கடின உழைப்பு, அயராத சேவையால், 10 லட்சம் 'செல்வ மகள்' சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 70,000த்திற்கும் மேற்பட்ட செல்வமகள் சே மிப்பு கணக்குகள் துவங் கப்பட்டுள்ளன. அஞ்சல் துறை காப்பீடில், 526 கோடி ரூபாய்க்கு பிரீமியம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட, 16 சதவீதம் அதி கம். கீழ்ப்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அஞ்சலக கட் டடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி