மேலும் செய்திகள்
ரூ.50 லட்சம் குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்
28-Aug-2024
சென்னை, சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று காலை, தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த மகேந்திரா பொலிரோ காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 280 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன. கடத்தலில் ஈடுபட்டவரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாண்டோம் சிங், 23, என்பதும், பெங்களூரிலிருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 280 கிலோ குட்கா, காரையும் பறிமுதல் செய்தனர்.
28-Aug-2024